வீர காளியம்மன் கோயிலில் கார்த்திகை திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :11 hours ago
மேலுார்: சருகுவலையபட்டி வீர காளியம்மன் கோயிலில் கார்த்திகை மாத திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நேர்த்திக் கடன் வேண்டி நிறைவேறியவர்கள் மந்தையில் இருந்து கோயிலுக்கு பால்குடம் கொண்டு சென்றனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேற்று மந்தையில் இருந்து 1.5 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் பூத்தட்டு கொண்டு சென்றனர். திருவிழாவில் சருகு வலையபட்டியைச் சுற்றியுள்ள கிராம பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.