கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருப்பணி திருமுகம் ஆலோசனை
ADDED :8 hours ago
பெருமாநல்லுார்: கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருப்பணி திருமுகம் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது.
திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் ராஜ கோபுரம், வசந்த மண்டபம், சுற்றுச்சுவர், திருமடப் பள்ளி, பொங்கல் வைக்கும் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பக்தர்கள் பங்களிப்பில் மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதனையொட்டி, முதல் கட்டமாக ராஜ கோபுரம் கட்டும் பணி ஜரூராக நடந்து வருகிறது. தொடர்ந்து, அடுத்தடுத்து திருப்பணிகள் மேற்கொள்ள திருப்பணி திருமுகம் ஆலோசனை கூட்டம் நாளை (11ம் தேதி) காலை, 10:30 மணிக்கு கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்தில், கோவில் மிராசுதாரர்கள், மண்டப கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், ஊர் பொது மக்கள் கலந்து கொள்ள கோவில் நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.