உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிகொண்ட பெருமாளுக்கு ஆயில்யம் நட்சத்திர சிறப்பு அபிஷேகம்

பள்ளிகொண்ட பெருமாளுக்கு ஆயில்யம் நட்சத்திர சிறப்பு அபிஷேகம்

கோவை; கவுண்டம்பாளையம் சரவணா நகர் சபரி கார்டனில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதர் வீரமாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் பள்ளிகொண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !