காங்கயம்பாளையம் அய்யப்பன் கோயிலில் அகண்ட நாம ஜபம்
ADDED :6 hours ago
சூலூர்: காங்கயம்பாளையம் ஸ்ரீ அய்யப்பன் கோயிலில், அகண்ட நாம ஜபம் மற்றும் மகா அன்னதானம் நடந்தது. சூலூர் அடுத்த காங்கயம் பாளையத்தில் உள்ள, ஸ்ரீ அய்யப்பன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு, மண்டல மகர விளக்கு திருவிழா கடந்த, நவ., 17ம்தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, 7ம் தேதி காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை அகண்ட நாம ஜபம் நடந்தது. பக்தர்கள் தொடர்ந்து அய்யப்ப நாமங்களை ஜபம் செய்தனர். மதியம் நடந்த மகா அன்னதானத்தில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். 21 மற்றும் 22 ம்தேதி, பறையெடுப்பு நடக்கிறது. நாட்டியம், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடக்கின்றன. ஜன.,14ம்தேதி மகர ஜோதி தரிசனம் நடக்கிறது.