உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாதி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

திருவாதி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 6ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் நடந்தது. 7ம் தேதி இரண்டாம் கால யாகசாலை ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை மற்றும் மூன்றாம் கால யாகசாலை ஹோமம் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று முன்தினம் 8ம் தேதி நான்காம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, கடம் புறப்பாடு, முத்துமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !