உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேய்பிறை சஷ்டி சிறப்பு வழிபாடு

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேய்பிறை சஷ்டி சிறப்பு வழிபாடு

விருத்தாசலம்: தேய்பிறை சஷ்டியொட்டி, முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 சிவ ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு மற்றும் வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் சுவாமி, கண்டியங்குப்பம் வெண்மலையப்பர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !