பைரவதலங்களில் ஜென்மாஷ்டமி வழிபாடு: திரளாக பக்தர்கள் வழிபட்டனர்
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஜென்மாஷ்டமியாக சிறப்பு வழிபாடு நடந்தது.
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி என்பது கால பைரவர் அவதரித்த நாள் ஆகும். பிரம்மனின் கர்வத்தை அடக்க சிவபெருமான் கால பைரவராக அவதரித்த நாளாக வழிபடப்படுகிறது. திருத்தளிநாதர் கோயிலில் நேற்று காலை யோகபைரவர் சன்னதி யாகசாலையில் காலை 9:30 மணிக்கு ரமேஷ்,பிரதோஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் மகாபைரவ யாகம் துவங்கியது.காலை 12:00 மணிக்கு பூர்ணாகுதியாகி மூலவர் பைரவருக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் விபூதிக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய யோகபைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தி.வைரவன்பட்டி மெய்ஞானபுரீஸ்வரர் கோயிலிலும் நேற்றுமுன்தினம் இரவு மகாபைரவ ேஹாமம் சிவாச்சார்யர்களால் நடத்தப்பட்டு மூலகால பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. திரளாக பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பெரிச்சிச் கோவில் சுகந்தவனேஸ்வரர் கோயிலிலும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.