உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுராந்தகம் ராமர் கோவில் பலிபீடத்திற்கு செப்பு தகடுகள் அமைப்பு

மதுராந்தகம் ராமர் கோவில் பலிபீடத்திற்கு செப்பு தகடுகள் அமைப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராமர் கோவில் பலி பீடத்திற்கு, செப்பு தகடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுராந்தகத்தில், புகழ்பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான, ஏரிகாத்த ராமர் என அழைக்கப்படும் கோதண்டராமர் திருக்கோவில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று, கடந்த சில மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. இதையடுத்து, உபயதாரர் நிதியின் மூலமாக, கொடி மரத்திற்கு அருகில் உள்ள பலிபீடத்துக்கு, செப்பு தகடுகள் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !