ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மணி கோவிலில் காயத்ரி மந்திர ஜெப யக்ஞம்
ஹலசூரு: ஹலசூரு ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மணி கோவிலில், ஸ்ரீ காயத்ரி மஹா மந்திர ஜெப யக்ஞம் நாளை நடக்கிறது.
பெங்களூரு ஹலசூரு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மணி கோவில் – விட்டலா மந்திரில், வி.கே.கண்ணன் குருஜி தலைமையில் ஸ்ரீ காயத்ரி மஹா மந்திர ஜெப யக்ஞம், 2010 முதல் நடந்து வருகிறது.
இதன் 15வது ஆண்டு விழா, வரும் 14ம் தேதி காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரை நடக்கிறது. நாளை காலை 7:00 மணிக்கு பிராணாயாம சூரிய மந்திரங்கள், சகல தேவதா காயத்ரி மந்திரங்கள்; 8:00 மணிக்கு இரண்டாம் சுற்று காயத்ரி மந்திரம்; 9:00 மணிக்கு மந்திர புஷ்பம், சாந்தி பஞ்சகம், ஜபம் நடக்கிறது. நிறைவில் தீர்த்தம், பிரசாதம் வழங்கப்படும். ஆன்மிக வித்வான் எம்.பி.பிரசாத், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். ஸ்ரீ காயத்ரி மஹா மந்திர ஜெப யக்ஞத்தால், உடல், மனம், ஆன்மா துாய்மை பெறும். அறிவு, தெளிவு, ஞானம் பெருகும். மன அமைதி, தைரியம், தன்னம்பிக்கை உருவாக்கும். வறுமை, தடை, தோல்வி நீங்கும், எதிலும் வெற்றி கிடைக்கும். லட்சுமி கடாட்சம் பெறுவர். நரம்பு மண்டலம் துாண்ட பெற்று, நல்ல தெளிவான பேச்சு, நேர்மறை ஆற்றல்கள் பெருகும். ஸ்ரீ காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்கும் போது மனம், மூளை உயர்நிலையை அடைகிறது. நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். மந்திரத்தை 108 முறை ஜெபிக்கலாம்.