உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் மலையிலிருந்து இறக்கப்பட்ட மஹா தீப கொப்பரை

திருவண்ணாமலையில் மலையிலிருந்து இறக்கப்பட்ட மஹா தீப கொப்பரை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலை உச்சியிலிருந்து, மஹா தீப கொப்பரை இறக்கப்பட்டு, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.


திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் டிச., 3ல், 2668 அடி, உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் மஹா தீபம் எரிந்த நிலையில் அதை, நேற்று காலை, 6:00 மணி வரை பக்தர்கள் வழிபட்டனர். பின்னர், மஹா தீப கொப்பரை, மலை உச்சியில் இருந்து, நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின் சிறப்பு பூஜை செய்து, பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. மலை மீது செல்ல முடியாத பக்தர்கள், மஹா தீப கொப்பரையை வணங்கினர். ஆருத்ரா தரிசனத்தன்று, மஹா தீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட, ‘தீப மை’ பிரசாதம், சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். பின் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !