கோவை கோதண்டராமசுவாமி கோவிலில் மார்கழி உபன்யாசம் நாளை துவக்கம்
ADDED :45 minutes ago
கோவை: ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் கோவை திருப்பாவை சங்கம் இணைந்து ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம், உபன்யாச நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. இவ்வருடம், 67ம் ஆண்டு திருப்பாவை உபன்யாச நிகழ்ச்சியை உவே. வேங்கடேஷ் நடத்த உள்ளார். வரும் டிச.,16ம் தேதி காலை கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் அறங்காவர் குழு தலைவர் நாகசுப்ரமணியம் நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். 16ம் தேதி முதல் ஜன.,1ம் தேதி வரை, ராமர் கோவில் பிரவசன மண்டபத்தில் நடைபெறும். தினமும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6.30 மணி முதல் 8.15 மணி வரையிலும் உபன்யாசம் நடக்கும். ஜன., 1ம் தேதியன்று காலை ஆண்டாள் திருக்கல்யாணத்துடன் முடிவடைகிறது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று திருப்பாவை சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.