கோதண்டராமர் சுவாமி கோவிலில் பஜனை பாடி பக்தர்கள் திருவீதியுலா
ADDED :6 days ago
கோவை; மார்கழி மாதம் பிறந்ததையொட்டி கோவை ராம் நகர் பஜனை கோஷ்டி டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ நாம சங்கீர்த்தனா டிரஸ்ட் சார்பில் 83-ம் ஆண்டு ஸ்ரீ ராதா.மாதவ விவாக மகோத்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி தனுர் மாத வீதி பஜனை இன்று காலை 6 மணி அளவில் ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் இருந்து பஜனை பாடல்கள் பாடி பக்தர்கள் திருவீதியுலா வந்தனர். இந்த நிகழ்வானது வரும் 2026ம் ஆண்டு 14-01-2026 வரை தொடர்ந்து கோவையின் நகர வீதிகளில் பக்தர்கள் பாடல்கள் பாடிக்கொண்டு திருவீதியுலா வருவார்கள். விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு கடவுளின் திருவருளை பெற நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.