/
கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் மார்கழி வழிபாடு; வெள்ளி கவசத்தில் அண்ணாமலையார் அருள்பாலிப்பு
திருவண்ணாமலையில் மார்கழி வழிபாடு; வெள்ளி கவசத்தில் அண்ணாமலையார் அருள்பாலிப்பு
ADDED :6 days ago
திருவண்ணாமலை: மார்கழி மாத பிறப்பை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உற்சவருக்கு (உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு பூஜை செய்து அணிவிக்கப்பட்ட வெள்ளி கவசத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நினைத்தாலே முக்தி தரக்கூடிய, பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்கள் கருவறையில் பாடப்பட்டது. அம்மன் சன்னதியில் உண்ணாமுலை அம்மனுக்கு மலர் கிரீடம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று முதல் மார்கழி மாதம் முழுவதும் உற்சவ மூர்த்தியான அண்ணாமலையாருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.