கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவம் துவக்கம்
கோவை: ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவம் இன்று (17ம் தேதி) காலை துவங்கியது. இதில் முதல் நிகழ்வாக பிரார்த்தனை, புண்ணியா ஹவசனம், சங்கல்பம், கலச்ஸ்தாபனம், ஸ்ரீமத் சுந்தரகாண்ட ஹோமம் ஆகியன நடைபெற்றது. தொடர்ந்து அனுமனின் திரு உருவப்படத்திற்கு தீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை 06-30மணி அளவில் வேத பாராயணம் நடைபெறுகிறது . இரண்டாம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை காலை 9- 15 மணியளவில் ஸ்ரீமத் சுந்தரகாண்ட ஹோமம் அதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 1-00 அளவில் பூரணா ஹதி, தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 06-30 மணியளவில் சீதா கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மூன்றாம் நாள் நிகழ்வாக வெள்ளிக்கிழமை 19-12 2025 அன்று காலை 5-00 மணிக்கு அனுமனுக்கு அபிஷேகம், பவமான ஸூத்தஹோமம், பளித்தா சுத்த ஹோமம், வாயு சுத்த ஹோமம்,தொடர்ந்து ஸ்ரீ ராமர் சீதா அனுமானுடன் மூல மந்திர ஹோமங்கள் நடைபெறும். காலை 8:30 மணிக்கு தீபஆராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6:30 மணி அளவில் வேத பாராயணம், அனுமன் திருவீதியுலா வருகிறார்.