உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


கள்ளக்குறிச்சி சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, திருமுறை பாடல்கள் பாடி நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதேபோல கள்ளக்குறிச்சி சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், தென்கீரனுார் அருணாச்சலேஸ்வரர், கணங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமா மகேஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.


சின்னசேலம், தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் பெரியநாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சரநாதர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. சங்கராபுரம்; சங்கராபுரம் சன்னதி தெருவில் உள்ள சங்கரலிங்கேஸ்வரர் கோவிலில் நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏகாம்பரேஸ்வரர் கோவில், தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவில், மூக்கனுார் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !