உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி; திருக்கல்யாணம் விமரிசை

சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி; திருக்கல்யாணம் விமரிசை

சென்னை: அஷ்டலட்சமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு, திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது.


பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவிலில், கடந்த ஆண்டு பிப்., மாதம் திருப்பணி துவக்கப்பட்டு, கடந்த அக்., 31ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மண்டலாபிஷேகம் செய்யப்பட்டு வந்தது. அதன் பூர்த்தி நாளான நேற்று காலை 5:00 மணி முதல் சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, தனுர்மாத சாற்றுமுறை நடந்தது. அதைத் தொடர்ந்து ஹோமங்கள் நடத்தப்பட்டன. பின், மகாபூர்ணாஹுதி நடந்தது. காலை 9:00 மணிக்கு அஷ்டோத்திர சதகலச சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. நேற்று மாலை ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. பின், யாகசாலை வளர்க்கப்பட்டு, அக்னி பிரதிஷ்டை நடந்தது. ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தில் சர்க்கார் சங்கல்பம், பக்தர்கள் சங்கல்பம் நடந்தது. தொடர்ந்து வஸ்திர தானம், மகா சங்கல்பம் நடந்தது. பின், மாங்கல்ய பூஜை, மாங்கல்யதாரணம் நடந்தது. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின் நடக்கும் சம்பிரதாயங்கள் அரங்கேறின. இறுதியில் மங்கள ஆரத்தியுடன் திருக்கல்யாணம் பூர்த்தியானது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !