வெள்ளகோவிலில் வீரக்குமாரசுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :235 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் உள்ள வீரக்குமாரசுவாமி கோவிலில் இரண்டாம் நாள் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில், 143வது ஆண்டு மாசி மஹா சிவராத்திரி மற்றும் தேர்த்திருவிழா, 16ம் தேதி துவங்கி மார்ச் 4 வரை நடக்கிறது. நேற்று முன்தினம் தேரோட்டம் துவங்கியது. கோவில் குலத்தவர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். நேற்று மாலை, இரண்டாம் நாள் தேரோட்டம் நடந்தது. இன்று மாலை தேர் நிலை சேர உள்ளது. நாளை முதல், 13 நாட்களுக்கு கோவில் மண்டப கட்டளை நடக்கிறது. அன்றாடம் நாடகம், பள்ளி மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடக்கிறது.