அனுமார் கோதண்டராமசாமி கோயில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED :13 hours ago
பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயில் மார்கழிமாத விழாவையொட்டி அனுமன் ஜெயந்தி விழா துவங்கி நடக்கிறது. டிச.,14ல் சகஸ்கர தீப வழிபாடு, மறுநாள் திருவிளக்கு பூஜை நடந்தது. டிச., 16 ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடந்து, மின்சார தீப அலங்கார கேடயத்தில் அனுமன் உலா வந்தார். நேற்று காலை அபிஷேக ஆராதனைகள் நிறைவடைந்து மாலை சஞ்சீவி ஆஞ்சநேயராக அருள்பாலித்தார். டிச., 19ல் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சகஸ்ரநாமம், விஷ்ணு பாராயணம் நடக்க உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் புளிய மரத்தில் புனித புளி அனுமனாக உள்ளார். தொடர்ந்து பல நுாறு ஆண்டுகளாக பக்தர்கள் புளிய மரத்தை வழிபாடு செய்து வருகின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.