உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோதண்டராமர் கோயிலில் ஹனுமந்த் ஜெயந்தி உற்சவம்

கோவை கோதண்டராமர் கோயிலில் ஹனுமந்த் ஜெயந்தி உற்சவம்

கோவை: ராம்நகரிலுள்ள ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில், ஸ்ரீ ஹனுமந்த் ஜெயந்தி உற்சவம் கோலாகலமாக நேற்று துவங்கியது. இன்று காலை 9:15 மணிக்கு ஸ்ரீ மத் சுந்தரகாண்ட ஹோமம், ஸ்ரீராமர் பட்டாபிஷேகமும், மாலை 6:30 மணிக்கு சீதா கல்யாண வைபோகம் நடக்கிறது. நாளை காலை 5 மணிக்கு பவமான ஸூக்த ஹோமம், பளித்தா ஸூக்த ஹோமம், வாயு ஸூக்த ஹோமம், ஸ்ரீ ராமர், சீதா ஹனுமான் மூலமந்த்ர ஹோமங்கள் நடக்கின்றன. காலை 8:30 மணிக்கு மஹாதீபாராதனையும், மாலை 6:30 மணிக்கு வேதபாராயணத்துடன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. திரளான பக்தர்கள் பங்கேற்க கோயில் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !