உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் ஐயப்பன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

அன்னூர் ஐயப்பன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

அன்னூர்; அன்னூர் ஸ்ரீ ஐயப்பன் கோவில் திருவிழாவில் இன்று கொடியேற்றம் நடந்தது.


அன்னூர், தென்னம்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், 56ம் ஆண்டு ஐயப்பன் திருவிழா நேற்று மாலை, வாஸ்து பூஜையுடன் துவங்கியது. இன்று அதிகாலை 3:30 மணிக்கு, முதல் கால ஹோம பூஜை நடந்தது. காலை 6:10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. ஐயப்பனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (19ம் தேதி) மாலை பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் கொண்டு வருதலும், இரவு வேள்வி பூஜையும் நடக்கிறது. வரும் 20ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு ஐயப்பனுக்கு, 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. வரும் 21ம் தேதி மதியம் யானை, செண்டை மேளம், ஜமாப் மற்றும் ஐயப்ப பக்தர்கள் பஜனை உடன் ஐயப்ப சுவாமி திருவீதி உலா அன்னூரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெறுகிறது. இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !