புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு
ADDED :280 days ago
திட்டக்குடி: மார்கழி மாதத்தையொட்டி, திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, மூன்றாம் நாளான நேற்று காலை 5:30 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், காலை 6:15 மணியளவில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, ஏராளமானோர் திருப்பாவை பாசுரங்கள் பாடி கோவில் வளாகத்தை வலம் வந்து, சுவாமியை வழிபட்டுச் சென்றனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.