அன்னூர் அபிஷ்ட வரத ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
அன்னூர் அருகே தாளத்துரை பகுதியில் அனுமன் ஜெயந்தியை ஒட்டி அபிஷ்ட வரத ஆஞ்சநேயர் கோயிலில் 400 கிலோ பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆஞ்சநேயர் அருள் பாலித்தார்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தாளத்துறை என்ற கிராமத்தில் அதிஷ்ட வரத ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி ஒட்டி அதிகாலை மூலவர் ஆஞ்சநேயருக்கு மஞ்சள், பால், தயிர், தேன் ,உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன . அதனைத் தொடர்ந்து சூரிய பிறை பூ பந்தலில் என்ற வகையில் சுமார் 400 கிலோ அளவில் ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சு, சப்போட்டா, மாதுளை, சாத்துக்கொடி உள்ளிட்ட பல்வேறு பழங்களைக் கொண்டு சூரிய பிறை வடிவில் அலங்காரம் செய்யப்பட்டு பூ பந்தலும் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.