உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாயாண்டிஸ்வரர் கோவிலில் அனுமன் ஜெயந்தி வழிபாடு

மாயாண்டிஸ்வரர் கோவிலில் அனுமன் ஜெயந்தி வழிபாடு

நெகமம்; நெகமம் - பல்லடம் ரோட்டில் உள்ள மரகதாம்பிகை உடனமர் மாயாண்டிஸ்வரர் கோவிலில் அனுமன் ஜெயந்தி வழிபாடு நடந்தது. நெகமம் - பல்லடம் ரோட்டில் உள்ள மரகதாம்பிகை உடனமர் மாயாண்டிஸ்வரர் கோவிலில் ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு, அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாட்டு நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு, வட மாலை அணிவித்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. இதில், நெகமம் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இறுதியில், அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !