உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா; 21ல் புஷ்பாஞ்சலி வழிபாடு

வால்பாறை ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா; 21ல் புஷ்பாஞ்சலி வழிபாடு

வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை திருவிழாவையொட்டி இன்று ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது.


வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி கோவிலின், 39ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், இன்று மதியம், 12:00  மணிக்கு நடுமலை ஆற்றில் ஆராட்டுவிழா நடந்தது. தொடர்ந்து, 108 கலசங்களுடன் பக்தர்கள் புனித தீர்த்தத்தை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்று ஐயப்ப சுவாமிக்கு அபிஷேக பூஜை  செய்தனர். தொடர்ந்து, மாலை, 6:30 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு, 1008 விளக்கு பூஜை மற்றும் ஊஞ்சல் சேவை நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


நாளை காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும், மாலை 3:00 மணிக்கு புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஐயப்ப பக்தர்கள் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 21ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜையும், மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட் தேரில் ஐயப்ப சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை, அகிலபாரத ஐயப்ப சேவா சங்க தலைவர் மூர்த்தி,  செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் அழகர்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பக்தர்கள் பரவசம் நடுமலை ஆற்றில் ஐயப்ப சுவாமிக்கு அபிேஷக பூஜை நடந்த போது, வானில் மூன்று முறை வட்டமிட்ட கருடபகவானை, ஐயப்ப பக்தர்கள் கண்டு மெய்சிலிர்த்தனர். ஆராட்டு முடிந்து கோவிலுக்கு ஐயப்பன் செல்லும் வரை கருடன் வானில் சுற்றியபடி வந்ததை கண்டு பக்தர்களை பரவசமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !