திருப்புல்லாணி கோயிலில் பகல் பத்து உற்ஸவம் துவக்கம்
ADDED :3 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் திரு அத்தியாயன உற்ஸவம் எனப்படும் பகல் பத்து உற்ஸவம் நேற்று துவங்கியது.
உற்ஸவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷத் திருமஞ்சனம், சாற்று முறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் காலை 8:00 மணிக்கு நடந்தது.
நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டன. டிச.,30ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அன்று காலை சயன திருக்கோலம், விஸ்வரூப தரிசனம், இரவு 7:00 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
பகல் பத்து உற்ஸவத்தை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதமாக புளியோதரை, சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், சுண்டல் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.