வீரராகவப்பெருமாள் கோவிலில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி
ADDED :11 hours ago
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகுண்ட ஏகாதசி விழா, 30ம் தேதி நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி விழாவில், பரமபத வாசல் திறப்பு உற்சவம் விமரிசையாக நடக்கும்; அதற்கு, 10 நாட்கள் முன்னதாக, பகல் பத்து உற்சவமும், 10 நாட்கள் இரவு பத்து உற்சவமும் நடக்கும். பகல் பத்தின், முதல் நாள் இரவு, திருநெடுந்தாண்டகம் என்ற நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர் மாவட்ட முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை சார்பில், நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விழா நிறைவாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.