திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல்
ADDED :1 days ago
பண்ருட்டி: வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி, திருக்கழுக்குன்றம் சிவனடியார் தாமோதரன் தலைமையில் நேற்று காலை நடந்தது. மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரிய நாயகிக்கு அபிேஷகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில் கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருவாசக முற்றோதல் குழுவினர், திலகவதியார் திருநாவுக்கரசர் இறைபணி மன்றத்தினர் செய்திருந்தனர்.