உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை ஏழுமலையான் கோவில் பணி திருப்பதி பொறியாளர்கள் ஆய்வு

திருமலை ஏழுமலையான் கோவில் பணி திருப்பதி பொறியாளர்கள் ஆய்வு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் நடந்து வரும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுமான பணிகளை திருப்பதி தேவஸ்தான பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.


உளுந்துார்பேட்டையில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை திருப்பதி தேவஸ்தான பொறியாளர்கள் குழு நேற்று ஆய்வு செய்தனர். திருப்பதி தேவஸ்தான பொறியாளர்கள் குழு ஜெயராம் நாயக் தலைமையில் பொறியாளர்கள் வெங்கட்ரமணா, மல்லிகார்ஜூனாபிரசாத், சிவாபிரார்டு ரெட்டி, நாகராஜா, கிருஷ்ணாராவ், வெங்கடேஷ்வரலு, சுமதி, வெங்கட்டரெட்டி, ரவிகாந்த் ஆகியோர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து கூறினர். அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரான அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு வரவேற்றார். அறங்காவலர் குழு முன்னாள் மாவட்ட தலைவர் சந்தோஷ், பொறியாளர் ஏழுமலை, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்புராயன், நிர்வாகிகள் வெற்றி, வெங்கடேசன், வழக்கறிஞர் திலீப், மகாராஜன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !