உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் துவங்கியது.


நடு நாட்டு திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கமான முதல் பத்து நாட்கள் பகல் பத்து விழாவாக கொண்டாடப்படும். இவ்விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழி, சுவாமி புறப்பாடாகி ஆலய வலம் வந்து பெருமாள் சன்னதியில் எழுந்தருளினார். பகல் பத்து உற்சவத்தின் நிறைவாக வரும் 29ம் தேதி இரவு பெருமாள் மோகன அலங்காரத்திலும், திருமங்கையாழ்வார் மோட்ச வைபவம் நடக்கிறது. மறுநாள் 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் சொர்க்கவாசல் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் ஏஜெட் கோலாகலன் மேற்பார்வையில் கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வரு கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !