உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன., 3ல் நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். ஆருத்ரா தரிசன விழாவுக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டிச., 25ல் மாணிக்கவாசகரு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதனைத்தொடர்ந்து மாணிக்கவாசகர் பல்லாக்கில் எழுந்தருளி கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வருவார். பின் மகா தீபாராதனை நடக்கும். 9ம் நாளான ஜன., 3ல் கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள நடராஜர் சுவாமி சன்னதி முன்பு மாணிக்கவாசகர் எழுந்தருளி திருவாசகம் பாடியதும் நடராஜர் சுவாமி ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளிக்க உள்ளார். பின் நடராஜ் சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாரதனை நடந்ததும் அங்கு கூடியிருக்கும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்லதுரை செய்து வருகிறார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !