உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: சேவைக்கு முதலிடம்..!

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: சேவைக்கு முதலிடம்..!

சீடர்களுடன் விருந்துக்கு சென்றார் இயேசு. அவருக்கு அருகில் உட்கார்வது யார் என சீடர்களான  பேதுரு, யோவான், யூதாஸ்க்குள் போட்டி வந்தது. அவர்கள் கூச்சலிடவே இயேசு ஓடி வந்தார். ஒரு அறைக்குள் நுழைந்த அவர், நீளமான துண்டை இடுப்பில் கட்டியபடி, கையில் தட்டு, தண்ணீர் ஜக்கு கொண்டு வந்தார். சீடர்கள் வரிசையாக அமர்ந்திருக்க அவர்களின் முன்பு மண்டியிட்டார்.  ஒவ்வொருவராக தட்டில் கால்களை வைக்கச் சொல்லி தண்ணீர் ஊற்றி கழுவினார். இடுப்பில் கட்டிய துண்டால் பாதங்களைத் துடைத்தார். அவரது பணிவைக் கண்ட சீடர்கள் பிரமித்தனர். ‘ குரு, போதகர், ஆண்டவர் என்றெல்லாம் என்னை சொல்கிறீ்ர்கள். அதற்கு உதாரணமாக செயல்பட வேண்டாமா...  இடம் பிடிப்பதில் ஏன் சண்டையிடுகிறீர்கள்? பிறருக்கு சேவை செய்வதில் முதலிடம் பிடியுங்கள் என்றார். அன்பு, நேர்மை, பணிவுக்கு முதலிடம் கொடுத்தார் இயேசு. 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !