உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துப்பேட்டை ஹரிஹரசுதன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கோலாகலம்

முத்துப்பேட்டை ஹரிஹரசுதன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கோலாகலம்

திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே தினைக்குளத்தில் சக்திவேல் முருகன் கோயில் அருகே ஹரிஹரசுதன் ஐயப்பன் சன்னதி உள்ளது.


மண்டல பூஜையை முன்னிட்டு தினைக்குளம் சாலையில் உள்ள சக்திவேல் முருகன் கோயிலில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் உடலில் பல வண்ண பொடிகளை பூசியவாறு, மேளதாளங்கள் முழங்காடி, பாடி நடனமாடியவாறு பேட்டை துள்ளி வந்தனர். பின்னர் அருகில் உள்ள ஊரணியில் புனித நீராடினர். பின்னர் ஹரிஹரசுதன் ஐயப்பன் சன்னதி முன்பாக விநாயகர், முருகன், ஐயப்பன் உள்ளிட்ட பஜனை பாடல்கள் பாடப்பட்டு நிறைவாக கருப்பண்ணசாமி வேடமிட்டு பாடல்களை இசை முழக்கத்துடன் பாடினர்.


18 படிகளிலும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை குருநாதர் பாலசுப்பிரமணியன் மற்றும் தினைக்குளம் ஹரிஹரசுதன் சபரிமலை யாத்திரை குழுவினர் செய்தனர். பக்தர்களுக்கு குளிர்பானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


* முத்துப்பேட்டை அருகே உள்ள இடையர் குடியிருப்பில் ஸ்ரீ சபரி சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை முன்னிட்டு ஆராட்டு விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வழக்கில் உற்ஸவர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். அப்போது தெருக்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் உற்ஸவமூர்த்திக்கு சிறப்பான வரவேற்பு ஆரத்தி எடுக்கப்பட்டது. பின்னர் கோயில் வளாகத்தில் ஐயப்பனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பேட்டை துள்ளி ஆடி வந்தனர். பகல் 12:30 க்கு சிறப்பு தீபாராதனையும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பூஜைகளை குருசாமி கணேசன் செய்தார். கூட்டு பிரார்த்தனை பஜனை நடந்தது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !