திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பகல் பத்து 6ம் நாள் வழிபாடு
திருவல்லிக்கேணி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் வைகுண்ட ஏகாதேசி பகல் பத்து திருவிழாவை முன்னிட்டு 6ம் நாளான இன்று ஸ்ரீ பகாசுரவதம் திருக்கோளத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு உற்சவம் சிறப்பாக நடந்து வருகிறது.இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, 6ம் தேதி, சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வைகுண்ட ஏகாதேசி பகல் பத்து திருவிழாவை முன்னிட்டு 6ம் நாளான இன்று ஸ்ரீ பகாசுரவதம் திருக்கோளத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, 30ம் தேதி, சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.