அவிநாசி அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
ADDED :55 minutes ago
அவிநாசி; அவிநாசி காந்திபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் லட்சார்ச்சனை நடைபெற்றது. பெங்களூரூ ஸ்ரீ வேத ஆகம சமஸ்க்ருத மஹா பாடசாலை முதல்வர் சிவஸ்ரீ சுந்தரமூர்த்திசிவாச்சாரியார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட அவிநாசி காந்திபுரம் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து,காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.