உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷத்தில் புத்தாண்டு பிறப்பு: சிவ வழிபாடு செய்து ஆண்டு முழுவதும் நல்ல பலனை பெறுவோம்!

பிரதோஷத்தில் புத்தாண்டு பிறப்பு: சிவ வழிபாடு செய்து ஆண்டு முழுவதும் நல்ல பலனை பெறுவோம்!

மார்கழி பிரதோஷம் சிவ வழிபாட்டிற்கு உகந்த சிறந்த நாள். 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதோஷம் வருவது விசேஷமானது. இன்று விரதமிருந்து சிவ வழிபாடு செய்ய எதிலும் வெற்றி கிடைக்கும். வீட்டில் விளக்கேற்றி வழிபட குடும்ப ஐஸ்வர்யம் பெருகும். 

பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது. அது முதல் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் திரயோதசி திதியில், சூரியன் மறைவதற்கு முன் உள்ள நேரமாகிய மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள பிரதோஷ நேரம் பாபத்தைப்போக்கும் நேரமாகும். 

அமிர்தம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால நஞ்சு தோன்றி அனைவருக்கும் பெருந்தொல்லை உண்டாக்கிய காலம். சிவன் அதை உண்டு, ஒருவருக்கும் தீங்கு ஏற்படாது காப்பாற்றிய காலம். சகல தேவதைகளும் சிவசந்நிதியில் கூடி, ஈசனை வழிபடும் காலம். தங்களைக் காக்க எல்லாரும் ஈசனை வேண்ட, அவர்கள் துன்பம் நீங்கி மகிழ, சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய காலம். ஈசனை வழிபட மிகச் சிறந்த காலம் பிரதோஷ காலம். சிவன் ஆலால விஷத்தை உண்ட நாள். குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும். இன்று ஈசனை வழிபட சிவனருளால் அனைவருக்கும் நல்லதே நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !