மானாமதுரை,இளையான்குடி கோயில்கள் மற்றும் சர்ச்சுகளில் புத்தாண்டு வழிபாடு
மானாமதுரை; மானாமதுரை,இளையான்குடி பகுதியில் உள்ள கோயில்கள் மற்றும் சர்ச்சுகளில் புத்தாண்டு முன்னிட்டு நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் திருத்தல அருள் பணியாளர் ஜான் வசந்தகுமார் தலைமையில் ஏராளமான பாதிரியார்கள் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தனர்.இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்,விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.பின்னர் அருகில் இருந்தவர்களிடம் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மானாமதுரை புனித குழந்தை தெரசாள் சர்ச் மற்றும் சி.எஸ்.ஐ., உள்ளிட்ட பல்வேறு சர்ச்சுகளில் நடைபெற்ற புத்தாண்டு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வீர அழகர் கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன், வழிவிடும் முருகன் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களிலும் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல தாயமங்கலம், இளையான்குடி, சாலைக் கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள சர்ச்சுகள் மற்றும் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் புத்தாண்டு முன்னிட்டு வழிபாடு செய்தனர்.