ஆங்கில புத்தாண்டு : போடி கோயில்களில் சிறப்பு வழிபாடு
போடி; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்கார த்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை தக்கார் நாராயணி, சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன், செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் தரிசனம் பெற்றனர். போடி மேலச்சொக்க நாதர் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை கள் நடந்தன. போடி ஐயப்பன் கோயில், புதூர் சங்கடகர விநாயகர் கோயில், அக்ரஹாரம் பாலவிநாயகர் கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.