ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: சர்ச்சில் சிறப்பு பிராத்தனை
ADDED :13 hours ago
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு டி.இ.எல்.சி., சர்ச்சில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. கிணத்துக்கடவு டி.இ.எல்.சி., சர்ச்சில், சபை குரு சார்லஸ் தேவனேசன் தலைமையில் புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு பிராத்தனைகள் செய்து, பாடல்கள் பாடி புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், 500கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். மேலும், 12:00 மணிக்கு, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழக்கி ஒரு ஒருவர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.