திருப்பதி கோவிலுக்கு 78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் நன்கொடை
ADDED :13 hours ago
திருப்பதி; 78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. ஹைதராபாத்தைச் சேர்ந்த திரிஷூல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான சக்ரதர் மற்றும் சிவராஜனி ஆகியோரின் சார்பில், நிர்வாகக் குழு உறுப்பினர் நன்னபனேனி சதாசிவ ராவ் இந்த நன்கொடையை தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் வழங்கினார். திருப்பதி தேவஸ்தானத்திற்கு இவ்வளவு பெரிய அளவில் மருந்துகள் நன்கொடையாக வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த மருந்துகள் டிடிடி மத்திய மருத்துவமனை, பிஐஆர்ஆர்டி மற்றும் எஸ்விஐஎம்எஸ் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும்.