உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தாண்டு தரிசனம்; ஏழுமலையான் அலங்காரத்தில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

புத்தாண்டு தரிசனம்; ஏழுமலையான் அலங்காரத்தில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், தேன் உள்ளிட்ட திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர் வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணியருக்கு, மலர் அலங்காரத்துடன் ஆராதனைகள் நடந்தது.


* அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவர் வெண்பட்டு உடுத்தி திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.


* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோயில், கொத்தபுள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !