உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் கோவில், தேவாலயங்களில் வழிபாடு

விழுப்புரத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் கோவில், தேவாலயங்களில் வழிபாடு

விழுப்புரம்: ஆங்கில புத்தாண்டை யொட்டி, விழுப்புரத்தில் கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


ஆங்கில புத்தாண்டு 2026 பிறந்ததை யொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு, விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. அதே போல், புனித சவேரியர் தேவாலயம், ரயிலடி ஆரோக்கியமாதா, புனித ஜென்மராக்கினி உட்பட பல தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனை நடந்தது. கிறிஸ்தவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பங்கேற்று பிராத்தனை செய்தனர். அதே போல், விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள வீரவாழியம்மன் கோவிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது. அதே போல் வி.மருதுார் மாரியம்மன் கோவில் உட்பட பல கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், பக்தர்கள் பலரும் தங்களின் குடும்பங்களோடு கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று மாவட்டம் முழுதும் உள்ள கோவில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும், ஒருவரை ஒருவர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !