புவனகிரி ராகவேந்திரர், வள்ளலார் இல்லத்தில் புத்தாண்டு சிறப்பு பூஜை
ADDED :12 hours ago
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவில் மற்றும் மருதுார் வள்ளலார் அவதார இல்லத்தில் ஆங்கில புத்தாண்டில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
புவனகிரியில் மகான் ராகவேந்திரர் கோவிலில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அதிகளவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மருதுாரில் வள்ளலார் அவதார இல்லத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். அகவற்பா பாடியதுடன் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை முழக்கமிட்டனர். பின்னர் தியானம் செய்தனர். பக்தர்களுக்கு சுடு தண்ணீர், நாட்டு சக்கரை மற்றும் தேங்காய் பிரசாதத்துடன் அன்னதானம் வழங்கினர்