செஞ்சி லலிதா செல்வாம்பிகை கோவிலில் புத்தாண்டு வழிபாடு
ADDED :12 hours ago
செஞ்சி; செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவிலில் புத்தாண்டை சிறப்பு வழிபாடு நடந்தது.
செஞ்சி அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்தனர். காலை 8 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.