புது வருடத்தின் முதல் வெள்ளி சிறப்பு திருப்பலி, இடைக்காட்டூரில் குவிந்த குவிந்த கிறிஸ்தவர்கள்
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூர் சர்ச்சில் இன்று நடைபெற்ற புது வருடத்தின் முதல் வெள்ளி சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச் உள்ளது.130 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இந்த சர்ச் பிரான்ஸ் நாட்டின் கோதிக் கட்டடக் கலையில் கட்டப்பட்டு இன்றளவும் கம்பீரமாக காட்சியளித்து வருகிறது. தினந்தோறும் இந்த சர்ச்சை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், மாதத்தின் முதல் வெள்ளியிலும் மற்ற பண்டிகை நாட்களின் போது சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இன்று புது வருடத்தின் முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருப்பலி சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம்,இடைக்காட்டூர் திருத்தல அருள் பணியாளர் ஜான் வசந்தகுமார் தலைமையிலும் 20க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம்,விருதுநகர்,தேனி,திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் திருப்பலியில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட நிலையில் சர்ச்சின் உள்புறம் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் சர்ச் வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட பந்தலில் ஏராளமானோர் அமர்ந்து திருப்பலியில் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் விசாரணையை முடிக்க கேரள உயர் நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கெடு விதித்திருந்தது. இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில், சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ள மனு வில் கூறப்பட்டு உள்ளதாவது: செப்பனிடும் பணிக்காக, துவார பாலகர் சிலைகளில் இருந்து மட்டும் தங்கக் கவசங்கள் கழற்றப்படவில்லை. ஸ்ரீ கோவில் நடை பகுதியில் தசாவதாரத்தை விளக்கும் வகையிலான சிற்பங்களில் இருந்து இரு தங்கக் கவசங்கள், ராசி சின்னங்களில் அணிவிக்கப்பட்ட கவசங்கள், கதவு சட்டங்களின் மேல் பகுதியில் இருந்த கவசங்கள் மற்றும் கதவு சட்டத்தின் மேலே பிரபையில் இருந்த கவசங்கள் என, ஏழு தங்கக் கவசங்கள் செப்பனிட கழற்றப்பட்டன. தங்க முலாம் பூசும் பணிக்கான கூலியாக, 109.24 கிராம் தங்கத்தை பெற்றுக் கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ள, செப்பனிடும் பணியை மேற்கொண்ட பண்டாரி விசாரணையில் ஒப்புக் கொண்டார். மேலும், அதே அளவுக்கான தங்கத்தை கடந்த அக்., 25ல் அவர் ஒப்படைத்தார். எலக்ட்ரோ பிளேட்டிங் மூலம் பிரித்து எடுக்கப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதி, கோவர்தன் என்பவரிடம் தரப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
சந்தேகம்: அவரிடம் விசாரித்ததில், 474.96 கிராம் தங்கத்தை கடந்த அக்., 24ல் ஒப்படைத்தார். இந்த அளவு தங்கத்தை தான் போத்தி தன்னிடம் கொடுத்ததாகக் கூறினார்.ஆனால், அவர்கள் ஒப்புக் கொண்டதை விட, மிக அதிக அளவில் தங்கம் திருடப்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு தங்க முலாம் பூசப்பட்ட செப்பு தகடுகளின் மாதிரிகள் அறிவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் அறிக்கை கிடைத்ததும், திருடப்பட்ட தங்கத்தின் அளவு முழுமையாக தெரிந்து விடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.