வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி கோவிலில் துணை ஜனாதிபதி வழிபாடு
ADDED :10 days ago
வேலூர்: துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி கோவிலில் வழிபாடு செய்தார்.
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி பீடம் பொற்கோவிலுக்கு இன்று வருகை தந்து, லட்சுமி நாராயணி அம்மனை வழிபாடு செய்தார், அவர் அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சி வேண்டி லட்சுமி தேவியிடம் பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து கோவிலில் சக்தி அம்மாவின் 50வது பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்றார், அங்கு ஆன்மிகம் மற்றும் சமூக சேவைகள் குறித்து பேசினார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.