மார்கழி சோமவாரம்; அமிர்தகடேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :6 days ago
கோவை: மார்கழி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் இருக்கும் அமிர்தகடேஸ்வரருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.