திருவண்ணாமலையில் ரமணர் 146வது ஜெயந்தி விழா: கீர்த்தனை பாடிய இளையராஜா
ADDED :70 days ago
திருவண்ணாமலை; ரமண பகவானின், 146ம் ஆண்டு ஜெயந்தி விழா, திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி ரமணர் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜை நடந்தது. மஹன்யாச ருத்ர ஜபம், தனுர் மாத பாராயணம், ஜெயந்தி தின சிறப்பு பாராயணம், ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜா ரமணரின் கீர்த்தனைகளை பாடினார். நிகழ்வில் நுாற்றுக்கணக்கான மக்கள், பக்தர்கள் அவருடன் சேர்ந்து பாடி, பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.