உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளம் மீட்டெடுப்பதில் தாமதம்

நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளம் மீட்டெடுப்பதில் தாமதம்

நயினார்கோவில்; பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் எதிரில் உள்ள வாசுகி தீர்த்த குளம் மீட்டெடுப்பதில் தாமதம் ஏற்படுவதால் பக்தர்கள் மரண பீதியில் உள்ளனர்.


ஆண்டு முழுவதும் பக்தர்கள் நாகநாத சுவாமி கோயிலுக்கு வருகை புரிகின்றனர். இங்கு எதிரில் உள்ள வாசுகி தீர்த்த குளத்தில் நீராடிய பின் இறைவனை தரிசித்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் சில ஆண்டுகளாக குளம் முழுவதும் சுற்றி உள்ளவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கழிவு நீர் கலக்கும் இடமாக மாற்றி உள்ளனர். மேலும் படித்துறைகள் அனைத்தும் உடைந்து, அவ்வப்போது தூர்வாரப்பட்டு ஆங்காங்கே பள்ளமாகி அபாய கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் குளத்தில் இறங்குவோர் கழிவு நீரில் சிக்குவதுடன் அங்குள்ள பள்ளத்தை அறிய முடியாமல் தவிக்கின்றனர். தொடர்ந்து குளத்தில் குளிக்க முற்பட்டால் உயிர் பலி நிச்சயம். இக்குளத்தை தூர்வாரி மீட்டெடுக்கிறோம் என்ற நோக்கில் பல ஆண்டுகளாக அனைத்து அரசியல் கட்சியினர் வாக்குறுதிகளை அளிக்கின்றனர். மேலும் தற்போது வரை ஆக்கிரமிப்பு குறித்து அளவெடுக்கும் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இச்சூழலில் அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறும் நிலையில், அனைத்து வகையான செயல்பாடுகளையும் வேகப்படுத்தி குளத்தை மீட்டெடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !