காரமடை ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவம் விழா துவக்கம்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் சிவன்புரத்தில் உள்ள, ஐயப்பன் கோயிலில், 35வது மண்டல மகோற்சவ விழாவும், 66வது ஐயப்ப சேவா சமிதியின் ஆண்டு விழாவும் நடந்தது.
கோயிலில் மண்டல கால பூஜைகளை ஆலய மேல் சாந்தி ஸ்ரீகாந்த் நம்பூதிரியும், மகோத்சவ சிறப்பு பூஜைகளை ஆலய தந்திரி விஷ்ணு பட்டதிரிபாடு மற்றும் குழுவினர் இணைந்து செய்து வருகின்றனர். ஐயப்ப சேவா சமிதியின் ஆண்டு விழாவுக்கு சமிதியின் தலைவர் அச்சுதன் குட்டி தலைமை வகித்தார். சத்தியவதி குத்துவிளக்கு ஏற்றினார். ஐயப்ப சேவா சமிதி செயலாளர் சத்தியநாதன் வரவேற்றார். கோலை சாமிசெட்டிபாளையம் ஸ்ரீவாராஹி மந்திராலய ஸ்ரீவாராஹி மணிகண்ட சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். அனைத்து ஹிந்து சமுதாய சங்க நந்தவனத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுகுமார் உள்பட பலர் பேசினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஐயப்ப சேவா சமிதி உறுப்பினர் உமாபதி நன்றி கூறினார். விழாவில் ஐயப்ப சேவா சமிதியினரின் பஜனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.