உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பக்தர்களுக்கு நற்செய்தி: ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் இனி ஆன்லைனில் கரண்ட் புக்கிங் செய்யலாம்

திருப்பதி பக்தர்களுக்கு நற்செய்தி: ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் இனி ஆன்லைனில் கரண்ட் புக்கிங் செய்யலாம்

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை  இனி ஆன்லைன் மூலமாகவே கரண்ட் புக்கிங்  செய்யும் புதிய நடைமுறையைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஜனவரி 9,  முதல் சோதனை அடிப்படையில் அமலுக்கு வருகிறது.


இதுவரை திருமலை கவுண்டர்களில் நேரடியாக வழங்கப்பட்டு வந்த 800 ஸ்ரீவாணி டிக்கெட்டுகள், இனி முழுமையாக ஆன்லைன் கரண்ட் புக்கிங் முறைக்கு மாற்றப்படுகின்றன. ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் ஒதுக்கப்படும் 500 டிக்கெட்டுகளுடன் சேர்த்து, இந்த 800 டிக்கெட்டுகளும் இனி ஆன்லைனில் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்படும். பிற்பகல் 2 மணி வரை பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள், அதே நாளில் மாலை 4 மணிக்கு தரிசனத்திற்காகத் திருமலையில் ரிப்போர்ட் செய்ய வேண்டும். இந்தத் திட்டம் ஒரு மாத காலத்திற்குச் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதன் முடிவுகளைப் பொறுத்து, ஸ்ரீவாணி தரிசன நேரங்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.டிக்கெட்டுகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க, பக்தர்கள் இந்த ஆன்லைன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !